Nagaratharonline.com
 
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சவால் விடும் கல்லல்  Oct 28, 11
 
கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அனைவரும் கல்லலில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதே போன்று கால்வாய் வசதி, அரசு கல்லூரி துவக்குவேன் என அள்ளி தெளித்தனர். இந்த வாக்குறுதிகளை தேர்வு செய்யப்பட்ட எம்.பி., முதல் வார்டு கவுன்சிலர்கள் வரை அளித்துள்ளனர். ஆனால், இன்று வரை இப்பணிகள் நடக்கவில்லை.

இதனால், புதிதாக தேர்வான ஒன்றிய கவுன்சிலர்களுக்கு கல்லல் நகரம் ஒரு சவாலான இடமாக உள்ளது. எனவே, தற்போது தேர்வு செய்யப்பட்ட மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர் ஒன்றிணைந்து பஸ் ஸ்டாண்ட் கட்டுதல், இந்திராநகர் முதல் பஸ் ஸ்டாண்ட் வரை பல லட்ச ரூபாயில் கட்டிய மழைநீர் கால்வாய் சேதமடைந்து, குப்பை கொட்டுமிடமாக உள்ளது. மழை காலங்களில் ஈ.வெ.ரா.,நகர், விநாயகா நகரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. சீரான குடிநீர் கிடைக்கவில்லை. இது போன்ற சாவலான பணிகளை செய்து முடிக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

source : Dinamalar