Nagaratharonline.com
 
பாகனேரியில் பூட்டிக்கிடந்த ஆஸ்பத்திரியால் கர்ப்பிணி அவதி  Oct 27, 11
 
பாகனேரியில் இரண்டு அரசு ஆஸ்பத்திரிகள் இருந்தும், பிரசவத்திற்காக கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்பட்டனர்.

தீபாவளி அன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள், நர்சுகள் உட்பட ஊழியர்கள் யாரும் இல்லை. அன்று காலை 6 மணிக்கு, மூக்கான்பட்டியை சேர்ந்த சின்னையா மகள் முத்தாயி பிரசவ வலியால் அவதிப்பட்டார். அவரை திறந்த வேனில் உறவினர்கள், தாய்சேய் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஊழியர்கள் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஊழியர்களின்றி பூட்டி கிடந்தது.
இதனால், கர்ப்பிணியின் உறவினர்கள் அவரை திறந்த வேனில், 25 கி.மீ., தூரமுள்ள சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளித்தனர். இது போன்று அத்தியாவசிய தேவையான ஆஸ்பத்திரி முக்கிய நாட்களில் பூட்டியே கிடந்ததால், நோயாளிகள் குறிப்பாக கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகினர்.

source : Dinamalar