Nagaratharonline.com
 
பத்திரபதிவு ஆவணங்கள் இணைதளத்தில் பெற வசதி  Oct 27, 11
 
""பத்திரப்பதிவிற்குரிய ஆவணங்களை இணையதளம் மூலம் பெற்று பொதுமக்களே ஆவணங்களை தயாரிக்கலாம்,'' என மாவட்ட பதிவாளர் அருள்ராஜ்மனுவேல் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: பத்திரப்பதிவுக்கு தேவையான ஆவணங்களை, பொதுமக்கள் தாங்களாகவே தயாரிக்க மாதிரி படிவம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. இதற்கான முகவரி "www.tnreginet.net''-ல் பெற்று ஆவணங்களை தயாரித்து கொள்ளலாம். இது தவிர திருமண பதிவு, வில்லங்க சான்று நகல் மனு பெற தேவையான விண்ணப்பங்களை இந்த இணைய தளத்தில் பெறலாம் என்றார்.