Nagaratharonline.com
 
சென்ட்ரலில் அமைகிறது பிரமாண்ட மெட்ரோ ரயில் நிலையம்  Oct 22, 11
 
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமையவுள்ள மெட்ரோ ரயில் நிலையம், நான்கு ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 70 ஆயிரம் சதுர அடியில், மிக பிரமாண்டமாக அமையவுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் கீழ், 70 ஆயிரத்து 60 சதுர அடியில், சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் பிரமாண்டமாக அமைக்கப்படும்.இந்த ரயில் நிலையத்திலிருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம், பூங்கா நகர் மாடி ரயில் நிலையம் மற்றும் பூங்கா நகர் ரயில் நிலையம் ஆகிய நான்கு முக்கிய ரயில் நிலையங்களுக்கு, இணைப்பு வழி கொடுக்கப்படும்.மேலும், வண்ணாரப்பேட்டையில் இருந்து, விமான நிலையம் வரை அமைக்கப்படும் மெட்ரோ ரயில் பாதை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமையவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கப்படும்.

source : Dinamalar