Nagaratharonline.com
 
சிவகங்கை: ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள்: ஆய்வில் வெட்ட வெளிச்சம்  Nov 24, 09
 
ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள்: ஆய்வில் வெட்ட வெளிச்சம்


சிவகங்கை: மாவட்டத்தில் நடந்த ரேஷன் கார்டு ஆய்வு பணியில் 34 ஆயிரத்து 33 போலி கார்டுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜாராம் கூறியதாவது: தொடக்க கூட்டுறவு வங்கி, பாம்கோ, மகளிர் குழுக்கள் மூலம் மாவட்டத்தில் 639 ரேஷன் கடைகள் இயங்குகின்றன. மூன்று லட்சத்து 73 ஆயிரத்து 713 ரேஷன் கார்டுகள் உள்ளன. இக்கார்டுகளுக்கு மாதந்தோறும் அரிசி- 6,968 டன், சர்க்கரை - 685, கோதுமை -165, துவரம் பருப்பு - 270 டன் ஒதுக்கப்படுகிறது.




நடப்பு ஆண்டில் 12 ஆயிரத்து 950 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 9, 834 பேருக்கு வழங்கப்பட் டுள்ளது. ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 953 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கார்டுகள் குறித்து வீடு, வீடாக நூறு சதவீத ஆய்வு நடந்தது. இதில் 34 ஆயிரத்து 33 கார்டுதாரர்கள், அந்தந்த முகவரியில் இல்லை. இவை போலியாக இருக்கலாம் என தெரிகிறது. இவர்கள் கார்டை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். பெயர் பட்டியல் அந்தந்த ரேஷன் கடைகளில் ஒட்டப்படும். விடுபட்டவர்கள் பதிவு செய்யலாம். மீண்டும் விசாரணை நடத்தி அந்த கார்டுகளுக்கு பொருள் வினியோகிக்கப்படும். இதற்கு 30 நாட்கள் அவகாசம் தந்துள்ளோம்'' என்றார்.

Source: Dinamalar 24/11/09