Nagaratharonline.com
 
சென்னையில் கண் நோய் பரவுகிறது - உஷார்  Oct 21, 11
 
 
கண் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற பலர் வந்த வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

தட்ப வெப்ப மாற்றத்தால் தற்போது கண் நோய் பாதிப்பு பலருக்கு ஏற்படுகிறது. கண் அழுத்தம், நீர் வடிதல், கண் சிகப்பாக இருந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும். கண் நோய் பாதித்தவர்களுக்கு சுகமாக குறைந்தது 5 நாட்கள் ஆகும். டாக்டர் பரிந்துரையின்படி சொட்டு மருந்து போட வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்நோய் மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது.

வேறு வகை கண் வலியும் ஏற்படுவது உண்டு. கண் சிவந்து இருப்பதோடு கண் அழுத்தம் அதிகமாக இருந்தால் டாக்டரை உடனே அணுக வேண்டும். இப்போது பரவி வரும் கண் நோய் கண் பார்வையை பாதிக்காது. கைகளை கழுவி சுத்தமாக வைத்திருந்தால் விரைவில் குணமடையும். அரசு கண் மருத்துவமனைக்கு இப்போது கண் நோய் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள். ஆனாலும் அந்த எண்ணிக்கை அதிக அளவில் இல்லை.

source : Maalaimalar