Nagaratharonline.com
 
சென்னையில், நான்கு மாதங்களில் போக்குவரத்து போலீசார் வசூல் ரூ.4.58 கோடி : போக்குவரத்து விதி மீறல்  Oct 20, 11
 
சாலையில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதைப் போல், விதி மீறல்கள் தொடர்பாகவும் அதிக வழக்குகள் (75 சதவீதம்) இருசக்கர வாகன ஓட்டிகள் மீது பதியப்படுகிறது. குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதம் மட்டும், அசுரவேகம், அபாயகரமாக ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமை, மூவர் அமர்ந்து செல்லுதல், சிக்னலை மீறுதல் தொடர்பாக அதிகளவு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

கடந்த நான்கு மாதங்களில் சென்னையில் பதியப்பட்ட விதி மீறல் வழக்குகளில் மட்டும், வாகன ஓட்டிகளிடம் இருந்து 4.58 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கேமராக்கள் மூலம் கண்காணித்து, கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டு, வாகன ஓட்டியின் முகவரிக்கு செல்லும் போலீசார், அதைக் காட்டி அங்கேயே அபராத கட்டணத்தை வசூலித்து விடுகின்றனர்.

source : Dinamalar