Nagaratharonline.com
 
தங்கம் வாங்குபவர்கள் பட்டியலில்முதலிடத்தை பிடித்தது தமிழகம்  Oct 16, 11
 
தென்னிந்தியாவில், தங்கம் வாங்குபவர்களில், தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது என, இந்திய ஜுவல்லரி துறையின் வர்த்தக கண்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், "இந்திய ஜுவல்லரி துறையின் வர்த்தக கண்காட்சி, 2011' கடந்த 14ம்தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது.

தமிழ்நாடு தங்க நகை மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம், "" உலகம் முழுவதும், தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் அதிகரித்து வருவதால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தங்க நாணயங்களை அதிகமாக வாங்குகின்றனர். உலகளவில், தங்கம் வாங்குபவர்களில் இரண்டாவது இடத்தை, இந்தியா பெற்றுள்ளது. தென்னிந்தியாவில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்தாண்டு, இந்திய அளவில், 900 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது. இந்தாண்டு 1000 டன்னை எட்டலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.

source : Dinamalar