Nagaratharonline.com
 
"நான் மதுரை மேயரானால்...!' ... இன்று ஒரே மேடையில் 6 மேயர் வேட்பாளர்கள் பேச்சு  Oct 9, 11
 
தினமலர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் இணைந்து நடத்தும் "நான் மதுரை மேயரானால்...!' என்ற புதுமையான நிகழ்ச்சி, மதுரை காமராஜர் சாலை வர்த்தக சங்க கட்டடத்தில் இன்று (அக்., 10 ) மாலை 6.15 மணிக்கு நடக்கிறது.மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களான ராஜன்செல்லப்பா (அ.தி.மு.க.,), பாக்கியநாதன் (தி.மு.க.,), கவியரசு (தே.மு.தி.க.,), சிலுவை (காங்.,), பாஸ்கரசேதுபதி (ம.தி.மு.க.,), ராஜேந்திரன் (பா.ஜ.,) ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர். மதுரையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, தொழில்மய நகராக்க, தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த, அனைத்து துறை வளர்ச்சிக்கும் என்ன என்ன செய்வேன்? எப்படி செய்வேன்? என்பது குறித்து வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர்.

source : Dinamalar