Nagaratharonline.com
 
தி.நகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்  Oct 6, 11
 
நாளை முதல் போக்குவரத்து, கீழ்கண்ட முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. பனகல் பூங்கா மேம்பாலம், ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. வாகனங்கள், வடக்கு உஸ்மான் சாலையிலிருந்து மேட்லி சாலை சந்திப்புக்கு செல்லலாம்.

மேட்லி சாலை சந்திப்பிலிருந்து மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல, தடை விதிக்கப்படுகின்றன

முத்துரங்கன் சாலை, வி.என்.சாலை, சோமசுந்தரம் விளையாட்டு மைதானம், தியாகராய சாலை மேற்கு மற்றும் கிழக்கு புறம், பர்கிட் சாலை வடக்கு புறம் ஆகிய இடங்களில், பொதுமக்கள் தங்கள் கார்களை நிறுத்திக் கொள்ளலாம்.