Nagaratharonline.com
 
நியூயார்க் மகா கணபதி கோவிலுக்கு வெள்ளித் தேர்  Oct 5, 11
 
நியூயார்க் நகரில் உள்ள மகா கணபதி கோவிலுக்கு ரூ. 2.5 கோடியில் வெள்ளித் தேர் வடிவமைத்து, விநாயகர் சதுர்த்தியன்று வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்தத் தேரை வடிவமைத்த காரைக்குடியைச் சேர்ந்த ஆசாரி ஏகாம்பரத்துக்கு காரைக்குடி நடையாளர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடை பெற்றது.

ஏகாம்பரம் பல்வேறு மாநிலங்கள், நாடுகளுக்குச் சென்று ரதம், வாகனம், வெள்ளித் தேர், வெள்ளிக் கவசம், வெள்ளி அங்கிகள் வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு காரைக்குடி அழகப்பர் நடையாளர் கழகம், காரைக்குடி தொழில் வணிகக் கழகம் ஆகியன இணைந்து பாராட்டு விழா நடத்தின.

source : Dinamani