Nagaratharonline.com
 
வங்கி உதவியாளர் தேர்வு: கட்டணமில்லா பயிற்சி  Sep 21, 11
 
சைதை சா.துரைசாமி மனிதநேய அறக்கட்டளை சார்பில் அகில இந்திய அளவில் வங்கி உதவியாளர் பணி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி: ஏழை எளிய மக்களின் கல்விக்காக கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மனிதநேயம் ஐ.ஏ.எஸ் கட்டணமில்லா கல்வியகம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் 27-ந் தேதி அகில இந்திய அளவில் வங்கி உதவியாளர் பணி தேர்வு நடைபெறவுள்ளது.
இத்தேர்வு எழுதுவோர் வசதிக்காக சைதை சா.துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை சார்பில் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள்
www.saidais.com என்ற இணையதள முகவரி அல்லது மையத்துக்கே நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ளபவர்களுக்கு பயிற்சி புத்தகம்,குறிப்புகள்,கையேடுகள்,செய்தித்தாள்கள்,நூலகவசதி,இணையதள வசதி ஆகியவை கட்டணமில்லாமல் வழங்கப்படவுள்ளது.

source : Dinamani