Nagaratharonline.com
 
கிரேட்டர் சென்னையில் 44.4 லட்சம் வாக்காளர்கள்  Sep 21, 11
 
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கிரேட்டர் சென்னைக்கான வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இதில், 44.40 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது: சென்னை மாநகராட்சி, 174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்து, 424 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 42 உள்ளாட்சி அமைப்புகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 155 வார்டுகள், 200 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, இப்பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இதில், 44.40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 22.42 லட்சம். பெண் வாக்காளர்கள் 22.06 லட்சம். மற்றவர்கள் 364 பேர். இப்பட்டியல், பொது மக்களின் பார்வைக்காக, சென்னை மாநகராட்சி அலுவலகம், 10 மண்டல அலுவலகங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி களில் உள்ள நகராட்சி மற்றும் போரூராட்சி அலுவலகங்களில் வைக்கப்படும்.

source : Dinamalar