Nagaratharonline.com
 
கிழக்குக் கடற்கரை சாலையில் கட்டடங்களுக்கு விதிகள் தளர்வு:  Dec 25, 10
 
27 ஆண்டுகால தடை: இந்த சாலையில், திருவான்மியூரை அடுத்துள்ள கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், உத்தண்டி ஆகிய கிராமங்களில் புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு தடை விதித்து அரசு 23-12-1980-ல் உத்தரவிட்டது.

கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையிலான பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்க விதிக்கப்பட்டிருந்த தடை 27 ஆண்டுகளுக்கு பின்னர் 13-3-2007-ல் ரத்து செய்யப்பட்டது

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு உள்பட்டு இந்த விதிகள் உருவாக்கப் பட்டுள்ளன

இதன்படி சாதாரண குடியிருப்புகள் கட்டிக்கொள்ள நிபந்தனைக்கு உள்பட்டு அனுமதி அளிக்கப்படும். அலுவலகக் கட்டடங்கள், சிறு கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கான கட்டடங்கள் 40 சதுர மீட்டர் பரப்பளவிலும், தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கட்டடங்களாக இருக்க வேண்டும்.

பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கான கட்டடங்கள் 100 சதுர மீட்டர் பரப்பளவிலும் 15 மீட்டர் உயரத்துக்குள்ளும் இருக்க வேண்டும். மக்கள் கூடும் அரங்குகள், அரசு கட்டடங்கள், வங்கிகள், மின்வாரிய கட்டடங்கள் உள்ளிட்டவை 300 மீட்டர் பரப்பளவிலும், 15 மீட்டர் உயரத்துக்குள்ளும் இருக்க வேண்டும்

இதன்படி, கிழக்குக்கடற்கரை சாலையை சுற்றுலா சாலையாக அறிவிக்கவும், இங்கு கட்டப்படும் ஹோட்டல்கள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த கட்டடங்களுக்கு தளபரப்பு குறியீட்டை 1.5 ஆக அதிகரிக்கவும் அரசு உத்தேசித்துள்ளதாக தெரியவந்துள்ளது

source : Dinamani