Nagaratharonline.com
 
இரு ரயில்களுக்கு ஒரே பெயர்: குழம்பும் பயணிகள்  Dec 25, 10
 
:சென்னை- ராமேஸ்வரம் செல்லும் இரண்டு ரயில்களுக்கு ஒரே பெயர் இருப்பதால், பயணிகள் குழப்பம் அடைகின்றனர். இப்பாதையில் வண்டி எண்- 16702, 16714 என இரு ரயில்கள் செல்கின்றன. இரண்டும் ராமேஸ்வரம் -சென்னை எக்ஸ்பிரஸ் என, ஒரே பெயரில் இயக்கப்படுகின்றன. இரண்டும் சில மணி இடைவெளியில் கிளம்புகின்றன. ஸ்டேஷனில் அறிவிபை கேட்டவுடன், முதலில் புறப்படும் ரயிலில் ஏறிவிடுகின்றனர். டிக்கெட் பரிசோதகர் வந்த பிறகே, பயணிகளுக்கு விஷயம் புரியும். இதனால் அடுத்த ஸ்டேஷனில் இறங்கும் நிலை ஏற்படுகிறது.

பாதிக்கப்பட்ட பயணி வரதராஜன் கூறுகையில், ""ஏற்கனவே சேது, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் என தெளிவான பெயருடன் ரயில்கள் சென்றன. இது பயணிகளுக்கு புரிந்தது. தற்போது இரு ரயில்களுக்கும் ஒரே பெயர் இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது. தென்னக ரயில்வே இப்பிரச்னையில் தனி கவனம் செலுத்தி, பழைய பெயர்களை வைக்க வேண்டும்

source ; Dinamalar