Nagaratharonline.com
 
திருச்சியில் இன்று ஐ.டி.,பார்க் திறப்பு விழா  Dec 8, 10
 
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நானை (9-ந்தேதி) மாலை இதை திறந்து வைக்கிறார்.

மொத்த பரப்பளவில் சுமார் 110 ஏக்கர் பொருளா தார மண்டலத்தில் கம்பெனி அமைக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. சுமார் 60 ஆயிரம் சதுரஅடியில் ரூ. 15 கோடி செலவில் தொழில் நுட்ப தகவல் மைய கட்டிடம் மற்றும் நிர்வாக அலுவலகம் அமைக்கும் பணிகளும் ரூ. 15 கோடியில் சாலைகள், தெருவிளக்குகள், காம்பவுண்டு சுவர், சிறப்பு பொருளாதார மண்டல உள் கட்டமைப்பு பணிகளும் நடைபெற்றது.

மொத்தம் ரூ. 30 கோடியில் கட்டப்பட்டு உள்ள இந்த தகவல் தொழில்நுட்பவியலை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இதுவரை பல கம்பெனிகள் பதிவு செய்துள்ளன. இந்த கம்பெனிகளுக்கான இட ஒதுக்கீடும் முடிவடைந்து உள்ளன. இவற்றில் சில கம்பெனிகள் உள்கட்ட மைப்பு பணிகளையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

திருச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டுள்ளதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 20ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது


source : maalaimalar