Nagaratharonline.com
 
மீனாட்சி அம்மன் கோயில் நைவேத்யங்களுக்கு கட்டணம்  Dec 2, 10
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நைவேத்யங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இன்று முதல் அமலாகிறது. அம்மன், சுவாமிகளுக்கு படைக்கப்படும் நைவேத்யங்கள் கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது. இதற்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை வாங்க தயாரிப்பு பணியில் ஈடுபடும் சிலர், "ஸ்பான்சர்களிடம்' வரைமுறை இல்லாமல் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதைதொடர்ந்து, ஒவ்வொரு உணவு தயாரிப்பிற்கும் கோயில் நிர்வாகம் கட்டணம் நிர்ணயித்தது. கற்கண்டு சாதம் தயாரிக்க ஒரு படிக்கு 800 ரூபாய், சர்க்கரை பொங்கல் 500 ரூபாய், வெண்பொங்கல் 450 ரூபாய், புளியோதரை 450 ரூபாய், லெமன்சாதம் 375 ரூபாய், தயிர் சாதம் 350 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நைவேத்யம் செய்ய விரும்புகிறவர்கள், கோயில் அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டண முறை இன்று முதல் அமலாகிறது.


source : Dinamalar