Nagaratharonline.com
 
மகிபாலன்பட்டி அருகே 'ஆதிபகவான்' கோயில்  Dec 29, 17
 
மகிபாலன்பட்டி பகுதி தோட்டம்ஒன்றில் பல ஆண்டுகளாக ஒரு சமண சிற்பம் மண்ணில் புதையுண்டு கிடந்தது.
அப்போது அதை ஆய்வு செய்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜவேலுதமிழகத்தின் பெரிய சமண தீர்த்தங்கரர் சிலைகளில் இதுவும் ஒன்று. சுமார் கி.பி.,5ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்றார்.இந்நிலையில் கவனிப்பாரற்ற இந்த சிற்பத்தை வைத்து கோவிலாக்கியுள்ளனர் சமணப்பண்பாட்டு மன்றத்தினர்.

மகிபாலன்பட்டி அருகே கோயிலார்பட்டியில் கிராமத்தினரிடம் பேசி பெற்ற அந்த சமண சிலையை வைத்து அங்கேயே உருவாக்கியது தான் ஆதி பகவான் கோயில். சிறிய அளவிலான பராமரிப்பில்லாத சாலை வசதியுடன் உள்ள இக்குக்கிராமகண்மாய் கரை அருகே அமைக்கப்பட்டுள்ள சிறிய அறையில் நான்கு அடி உயரத்துடன் தீர்த்தங்கரர் அமைதி தவழும் முகத்துடன் அமர்ந்திருக்கிறார். வெளியில் சிதைந்த சிற்பங்களுடன்
அமைதியான சூழலில் இக்கோயில் உள்ளது.

நமக்கு 24 வது தீர்த்தங்கரர் எனப்படும்மகாவீரரைத் தான் தெரியும்.
அதற்கு முன்பாக முதலில் தோன்றியவர் ரிஷப தேவர் எனப்படும் 'ஆதிபகவான்' என்பதும் அவருக்கு திருப்புத்துார்பகுதியில் கோயில் உள்ளதும் ஆச்சர்யமானது தானே. திருப்புத்துாரிலிருந்து மகிபாலன்பட்டி செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் உள்ள கோயிலார்பட்டியிலுள்ள இந்த சமணக்கோயிலை நீங்களும் ஒரு முறை சென்று பார்க்கலாம்.