Nagaratharonline.com
 
கண்டனுார் : வீட்டை உடைத்து 15 பவுன் திருட்டு  Dec 12, 17
 
கண்டனுார் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் கருப்பஞ்செட்டியார். காசி நகர விடுதியில் உள்ளார். இவரது மனைவி கலையரசி,53,. இவர் கண்டனுாரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள வீட்டிற்கு சென்று துாங்கியுள்ளார்.நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 15 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது