Nagaratharonline.com
 
NEWS REPORT: பரியாமருதுபட்டி அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பரியாமருதீஸ்வரர் கோவிலில் ஸ்தபதி பூஜை  Oct 27, 17
 
 
 
பரியாமருதுபட்டி அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பரியாமருதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, ஸ்தபதி வேலைகள் தொடங்குவதற்கு 26.10.2017 வியாழக்கிழமை மாலை மணி 4 முதல் 5 மணி வரை ஹோமம் மற்றும் முதல் கால பூஜை நடைபெற்றது

27/10/2017 வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் 6 மணி வரை ஹோமம் மற்றும் இரண்டாம் கால பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு ஸ்தபதி பூஜை சிறப்பாக நடைபெற்றது .

விழாவில் முரு. பழ வளவு பங்காளிகளும் ஆலய குருக்கள், ஞான சேகர் ஸ்தபதி, மற்றும் ஊர் மக்களும் கலந்து கொண்டனர்.கும்பாபிஷேக திருப்பணிகள் வேலைகளை நெற்குப்பை முரு பழ குடும்பத்தார் செய்து வருகின்றனர்

புகைப்படம் : முரு, வாசு