Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பையில் " இடிதாங்கி வீடு" " முரு. பழ" வளவில், இராமாயண ஏடு படித்தல் நிகழ்ச்சி  Oct 2, 17
 
 
நெற்குப்பையில் " இடிதாங்கி வீடு" என அழைக்கப்பெறும்" முரு. பழ" வளவில், இராமாயண ஏடு படித்தல் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

22/9/2017 கணபதி ஹோமம் செய்து, 23/9/2017 அன்று ஏடு எடுத்து, இராமாயணம் படிக்க துவங்கி, 30/9/2017 அன்று, ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகத்துடன் இனிதாக நிறைவு பெற்றது.

ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் அன்று கரும்புத் தொட்டில் கட்டி, வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டனர். சிலர், தொட்டில் கட்டிய கரும்பை பக்தியுடன் வாங்கி வீட்டிற்கு கொண்டு சென்றனர். இறுதியில் முரு. பழ வளவு பெண்மக்களுக்கு காளாஞ்சி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது .

செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்களிலும் மூன்று வேளையும் சிறப்பாக பொது விருந்து பரிமாறப்பட்டது

விழாவில் பங்கெடுத்துக்கொண்ட கீழச்சிவல்பட்டி. திரு V .தேனப்பன் பாடிய கவிதை :

நெற்குப்பை நகரினிலே
நீண்ட நெடும் காலமாக
இடிதாங்கியார் வீடடினிலே
இராமாயணம் படிக்கின்றனர் !!

மிகப் பெரிய வீட்டினிலே
மிக அதிகம் பேர் சேர்ந்து
பத்து நாள் திருவிழாவாய்
இராமாயணத்தில் கரைகின்றார் !!


தடபுடலாய் விருந்து வைத்து
அயோத்தியை உருவாக்கினார் !
பரிசுப்பொருள் பல அளித்துப்
பரதனையே காட்டுகின்றார் !!

திருமண வரம் கேட்டோர்
அடுத்தாண்டு நன்றியுடன்
திருத்தாலிதனைக் கொடுத்து
இராமன் அருள் பரப்புகிறார் !!

பிள்ளை வரம் கேட்டவர்கள்
அடுத்த ஆண்டே இங்கு வந்து
கரும்புத்தொட்டில் கட்டுகிறார் !!

கேட்ட வரம் கிடைத்தவர்கள் ஆயிரக்கணக்கினிலே
ராமஜெயம் எழுதி வந்தார் !
ரம்மியமாய் அவற்றையெல்லாம்
பூமாலை போல் தொடுத்துப்
புகழ் ராமன்கீர்த்தி சொன்னார் !!

வடநாட்டில் உள்ள
அயோத்தியைக் காண
அங்கு செல்வதைவிடவும்
நெற்குப்பையில் அருள்பெறலாம் !!

event submitted by : முரு. வாசு