Nagaratharonline.com
 
திருப்புத்தூர் அருகே டோல்கேட் கட்டண வசூல் துவக்கம்  Jul 29, 17
 
திருப்புத்துார் திருமயம்-மானாமதுரை தேசியநெடுஞ் சாலை எண் 226 ல் திருப்புத்துார் அருகே சிறுகூடல்பட்டி அரிபுரம் கண்மாய் அருகே அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் முன்னறிவிப்பின்றி நேற்று கட்டண வசூலைத் துவங்கியது.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணியாளர் தரப்பில் கூறுகையில்,
'இப்பகுதியினர் மாதம் ரூ.245க்கான பாஸ் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆதார், ஆர்.சி., போட்டோவுடன் டோல்கேட்டில் பதிவு செய்து, ரூ.245 செலுத்தி பாஸ் பெறலாம். இதன் மூலம் ஒரு மாதத்தற்கு கட்டணம் செலுத்தாமல் பல முறை இந்த டோல்கேட் வழியாக செல்லலாம்,'என்றனர்.