Nagaratharonline.com
 
கல்வி நிறுவனங்களுக்கு நோட்டுகள் வழங்கியதில் ரூ. 5 கோடி மோசடி: 2 பேர் மீது வழக்கு  Feb 11, 17
 
காரைக்குடி அழகப்பச் செட்டியார் கல்வி நிறுவனங்களுக்கு நோட்டுகள் வழங்கியதில் ரூ. 5 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாக 2 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்குடி அழகப்பச் செட்டியார் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் உமையாள் ராமநாதன் சிவகங்கை மாவட்ட காவல் காண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: அழகப்பச் செட்டியார் கல்வி நிறுவனங்களுக்கு சூடாமணிபுரத்தைச் சேர்ந்த வள்ளியம்மை, அருணா நகரைச் சேர்ந்த அவரது மகன் பழனியப்பன் ஆகியோர் பல ஆண்டுகளாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கி வந்தனர்.
இவர்கள் தரமற்ற நோட்டுப்புத்தகங்களை வாங்கி அவற்றை அதிக விலைக்கு கல்வி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர். இதன்மூலம் ரூ. 5 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இந்த மோசடிகளுக்கு ஏற்ப போலியான ஆவணங்களையும் தயாரித்துள்ளனர். இதனை தணிக்கைக் குழு கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து வள்ளியம்மை, பழனியப்பன் ஆகியோரிடம் கேட்டபோது அவர்கள் மிரட்டினர். இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதின் பேரில் காரைக்குடி அழகப்பாபுரம் காவல்நிலைய போலீஸார் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.