Nagaratharonline.com
 
காரைக்குடியில் பத்திர பதிவு முற்றிலும் முடக்கம்:குழப்பத்தில் ரியல் எஸ்டேட் துறையினர்  Nov 15, 16
 
காரைக்குடியில் நாள் ஒன்றுக்கு இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் 100 பத்திரங்கள் வரை பதியப்பட்டது. தமிழகத்தில் அதிக வருமானம் தரும் பத்திர அலுவலகங்களில் செஞ்சை அலுவலகமும் ஒன்று. தற்போது நாள் ஒன்றுக்கு 10 பத்திரங்கள் பதிவது அதிசயமாகி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 'டிடிசிபி' அனுமதி பெறாமல் நிலத்தை பதிய கூடாது, என்பதால் உடனடி தேவைக்கு நிலம் வாங்கவும், விற்கவும் முடியவில்லை. உள்நாட்டு பத்திரம் மூலம் பணம் இருப்பவர்களிடம், நிலங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வந்தவர்கள், எந்த தொழிலை மேற்கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விளை நிலங்கள் 1992-க்கு பிறகு மனை நிலங்களாக மாற்றப்பட்டதற்கு காரணம், அரசிடம் தெளிவான நெறிமுறைகள் இல்லாததால் தான். தற்போது நிபந்தனைகளுடன் பத்திரங்களை பதிவதற்கான அரசாணை போடப்பட்டும், அது வெளியிடப்படவில்லை. வாய்மொழி உத்தரவு மூலம் பதிவு முடக்கப்பட்டுள்ளது. இனி வருங்காலத்தில் விளை நிலங்கள் மனையிடங்களாக மாற்றாத வகையில் உரிய உத்தரவு பிறப்பித்து, ஏற்கனவே உள்ள மனை இடங்களை பதிவதற்கான உத்தரவை அரசு வெளியிட வேண்டும். அரசின் கவனக்குறைவு, அதிகாரிகளின் அலட்சியத்தால் ரியல் எஸ்டேட் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது