Nagaratharonline.com
 
பொன்னமராவதி புதுப்பட்டி மங்கல விநாயகர் கோயில் குடமுழுக்கு  Nov 10, 16
 
பொன்னமராவதி புதுப்பட்டி பாண்டிமான் கோயில் தெரு மங்கல விநாயகர் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதிஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து, புதன்கிழமை காலை 10.15 மணியளவில் புனிதநீர் கும்பத்தில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர். சிவாச்சாரியார் கிருபாகரசிவம் குடமுழுக்கை நடத்தினார்.