Nagaratharonline.com
 
NEWS REPORT: அங்கீகாரமற்ற மனை பதிவு - தடை நீடிக்கிறது  Oct 21, 16
 
விளைநிலங்களை, வீட்டுமனை களாக மாற்றவும், அங்கீகாரம் இல்லாத லே - அவுட்டில் உள்ள வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்யவும், விதிக்கப்பட்ட தடையை நீக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

அங்கீகாரம் இல்லாத லே - அவுட்டில் உள்ள வீட்டுமனை எதுவானாலும், அத்தகைய மனையில் கட்டப்பட்ட குடியிருப்புகள், கட்ட டங்கள் எதுவானாலும், பத்திரப்பதிவு துறை பதிவு செய்யக் கூடாது.அங்கீகாரம் இல்லாத லே - அவுட்டுகளின் வளர்ச்சியை தடுக்கவும், விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்காக மாற்றுவதை தடுக்கவும்,
இந்த உத்தரவு அவசியமாகிறது;

இதையடுத்து, 'இந்த உத்தரவால், பத்திரப்பதிவு அதிகாரிகள், வீட்டு மனை களை பதிவு செய்ய மறுக்கின்றனர்; நிலம் வாங்கியவர்கள், பதிவு செய்ய முடிய வில்லை; எனவே, உயர் நீதிமன்ற உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும்' என, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் மனு தாக்கல் செய்தது.

இவ்வழக்கில், தங்களையும் சேர்க்கும்படி கோரி, 30க்கும் மேற்பட்ட மனுக்கள்தாக்கல் செய்யப் பட்டன. இந்நிலையில், வழக்கு, முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க, நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

இம்மனுக்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர்கள், 'தீபாவளி வரையாவது, ஒட்டுமொத்த தடையை தளர்த்தலாம்; அங்கீகாரமில்லாத வீட்டு மனை பதிவு நிறுத்தப்பட்டு விட்டதால், இதுவரை, 274 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றனர்.

அதற்கு தலைமை நீதிபதி, ''கடத்தல் மூலம் கோடி கணக்கில் வருமானம் வருகிறது என்பதற்காக, அதை அனுமதிக்க முடியுமா; இப்படி அழுத்தம் கொடுத்தால், ஏதாவது நடக்கும் என, நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், நிர்ப்பந்தங்களுக்கு நாங்கள் ஆட்பட மாட்டோம்; அரசு தரப்பில், ஏதாவது கொள்கை அல்லது திட்டம் வகுக்க வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, அரசு,உள்ளாட்சி அமைப்புகள், அறநிலையத் துறை, வக்ப் வாரியம் ஆகியவற் றின் நிலங்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாத லே - அவுட் ஆவணங் களை பதிவு செய்வதை தடுக்கும் வகையில், அரசிதழில் வெளியிடப்பட்ட திருத்த சட்ட நகலை, அரசு பிளீடர், எம்.கே.சுப்ரமணியன் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

பத்திரப்பதிவு திருத்த சட்டம், அக்., 20ல் இருந்து அமலுக்கு வருவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பத்திரப்பதிவு செய்யப் படும் நிலங்களில், வெவ்வேறு பிரிவு கள் இருப்பதாக, எங்களுக்கு தெரிவிக்கப் பட்டது. விளைநிலங்களை, விளைநிலங்களாக பயன் படுத்துவதாக உத்தரவாதம் அளித்து, பதிவு செய்ய முன்வந்தால், அதற்கு எந்த தடங்கலும் இருக்காது.

பத்திரப்பதிவுக்கான நிலங்களை வகைப்படுத்தி னால்,அதுகுறித்து உத்தரவுகளை பெற முடியும். எனவே, நிலங்களை வகைப்படுத்தி விட்டால், எந்தெந்த வகையான நிலங்களுக்கு, அரசின் கொள்கை முடிவு தேவைப்படுகிறது என்பது தெரியவரும். இதற்கு, இரு வாரங்கள் போது மானது என, வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

எனவே, நிலங்களை வகைப்படுத்தி தாக்கல் செய்த பின், எங்கள் உத்தரவில் மாற்றம் செய்வது அல்லது விலக்கிக் கொள்வது குறித்து, பரிசீலிக்க முடியும். விசாரணை, நவ., 16க்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.