Nagaratharonline.com
 
NEWS REPORT: பொன்னமராவதி அழகிய நாச்சிம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு  Jun 28, 16
 
பொன்னமராவதி அழகிய நாச்சிம்மன் கோயிலில் திங்கள்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி காலபைரவருக்கு கும்பபூஜை, யாகவேள்வி, மகாபூர்ணாஹுதி செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை காலபைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜை குழுவினர் செய்தனர்.