Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தார் நற்பணி மன்றம் சென்னை- ஒருநாள் திருத்தல சுற்றுலா  Feb 1, 16
 
சென்னை நகரத்தார் நற்பணி மன்ற 45 உறுப்பினர்கள், அவர்தம் குடும்பத்தாருடன் 31/01/2016 அன்று காலை7 மணி அளவில் புறப்பட்டு, பாடலாத்திரி உக்கிர நரசிம்மர் ஆலயம், கொண்டமங்கலம் வன வீர ஆஞ்சநேயர் ஆலயம், அனுமந்தபுரம் அகோர வீர பத்திரர் ஆலயம், திரு இடைச்சுரம் ஞான புரீஸ்வரர் ஆலயம், 51 அடி உயரமுள்ள தேவி கருமாரியம்மன், மற்றும் திருவடிசூலம் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் சென்று அருள் பெற்றனர்.

மாலையில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில், அனைவரும் வயது வித்தியாசம் இன்றி, பங்கெடுத்துக்கொண்டு, பரிசுகள் பெற்றனர்.

சுற்றுலா ஏற்பாடுகளை, மன்றத் தலைவர் நச்சாந்துபட்டி, திரு மெ. ஸ்ரீனிவாசன் அவர்களும் செயலாளர் மதகுபட்டி ஆறு . சுப்ரமணியன் அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்