Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டி,ராமேஸ்வரத்தில் BSNL - wi-fi இலவச வசதி  Jan 11, 16
 
காரைக்குடி BSNL சார்பில் பிள்ளையார்பட்டி,ராமேஸ்வரத்தில் வைபை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.4 ஜி சேவையை விட அதிக வேகத்தில் இணைய தள சேவையை மக்கள் பெறும் வகையில், BSNL சார்பில் 40 ஆயிரம் இடங்களில் வைபை வசதி ஏற்படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி BSNL தொலை தொடர்பு மண்டலம் சார்பில், ராமேஸ்வரம், பிள்ளையார்பட்டியில் இந்த வசதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வைபை வசதி அமைக்கப்படும் பட்சத்தில், முதல் அரை மணி நேரத்திற்கு இலவச வைபை வசதியும், அதற்கு மேல் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.