Nagaratharonline.com
 
மழையால் மலர்ந்த கீரை வகைகள் : வல்லாரை, தூதுவளை, பசலைக்கு மவுசு  Nov 10, 15
 
தற்போது பெய்து வரும் தொடர் மழையை தொடர்ந்து, தூதுவளை, வல்லாரை, குறிஞ்சான், பசலைக்கீரையின் வரத்து அதிகரித்துள்ளது.
வல்லமை உடையது வல்லாரை. நீர் நிலைகளில் தானாக வளரும். இரும்பு, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் தாது உப்பு அடங்கியுள்ளன. மூளை நன்கு செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை தகுந்த முறையில் பெற்றிருப்பதால், ஞாபக சக்தி அதிகரிக்க வல்லாரை கீரை சாப்பிடுவது நல்லது, என்கின்றனர் ஆன்றோர்கள். அதே போல், தூதுவளையை சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு, சளி நீங்கும். ஊறவைத்த அரிசியில், தூதுவளையை போட்டு அரைத்து தோசையாகவும், ரசமாகவும் வைத்து சாப்பிடலாம். குறிஞ்சான் கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பசலைக்கீரை உள்ளது. எலும்பு வளம்பெற பிரண்டையை சாப்பிடலாம். அரைக்கீரை, தண்டு கீரை, பொன்னாங்கன்னி, வெந்தய கீரை என ஒரே வகை கீரைகளை சாப்பிட்டு வந்த மக்கள், தற்போது மூலிகை கீரைகளின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.