Nagaratharonline.com
 
NEWS REPORT: கண்டவராயன்பட்டி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்  Aug 21, 15
 
கண்டவராயன்பட்டி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆக.21) நடைபெற்றது

கண்டவராயன்பட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்குச் சொந்தமான ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (ஆக. 18) காலை 8.15 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கி . புதன்கிழமை 2 ஆம் கால மற்றும் 3 ஆம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்றன. வியாழக்கிழமை 4 ஆம் மற்றும் 5 ஆம் கால யாகபூஜைகள் வெள்ளிக்கிழமை 6 ஆம் கால யாக பூஜையுடன் தொடங்கி காலை 7.30 மணிக்கு விநாயகர் கோயில் கும்பாபிஷேகமும், 8 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனையும், தொடர்ந்து 8.15 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சியும்
நடைபெற்றன.
பின்னர் காலை 9 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகமும் 9.15 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றன. அன்று மாலை 5 மணிக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து 6.30 மணிக்குத் திருக்கல்யாண வைபவமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற்றன.

பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாக வேள்வி செய்து வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கண்டவராயன்பட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்தனர் .