Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பை பேரூராட்சியில் பாலிதீன் பை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி  Aug 14, 15
 
நெற்குப்பை பேரூராட்சியில் பாலிதீன் பை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நெற்குப்பை பேரூராட்சியை ஆக.15 முதல் பாலிதீன் பை இல்லாத பேரூராட்சியாக மாற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பேரூராட்சி சார்பாக வியாழக்கிழமை சாத்தப்ப அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பாலிதீன் பை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சியினை நடத்தினர். இதை பேரூராட்சித் தலைவர் சஞ்சீவி தொடங்கி வைத்தார்.

மேலும் இப்பள்ளியில் மாணவர்களுக்கு பாலிதீன் பையின் தீமைகள் குறித்த பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் பட்டிமன்றம் ஆகியவை நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் நடத்திய சைக்கிள் பேரணியில் பேரூராட்சித் தலைவர் சஞ்சீவி கலந்து கொண்டார்.

பின்னர் வீடுவீடாகச் சென்று துணிப் பை கொடுக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் சிறு வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டு பாலிதீன் பை ஒழி