Nagaratharonline.com
 
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை: புதிய முறை செப்டம்பரில் அமல்  Aug 10, 15
 
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை என்ற புதிய முறை செப்டம்பர் 1-ம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது, அடையாள அட்டை பதிவு தேவையில்லை என ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரயில் பயணத்தின்போது அடையாள அட்டையை காண்பித்தாலே போதும்.

6 பேர் கொண்ட குழுவினர் பயணம் செய்தாலும், அந்த குழுவில் உள்ள ஒருவர் அடையாள அட்டையை வைத்திருந்தாலே போதுமானது. இதனால், பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது நேரத்தை சேமிக்க முடியும். இதற்காக மென்பொருள் மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த புதிய முறை செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்” என்றனர்.