Nagaratharonline.com
 
கொப்பனாபட்டியில் திருமயம் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்  Jul 23, 15
 
கொப்பனாபட்டி நாராயணன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் திருமயம் குறுவட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் கடந்த 13-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுவரை முடிந்துள்ள போட்டிகளில் 17 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான கோகோ மற்றும் எரிபந்து போட்டிகளில் கொப்பனாபட்டி நாராயணன் செட்டியார் உயர்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது. 19 வயதுக்குள்பட்ட ஆண்கள் கைப்பந்து போட்டியில் திருமயம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், 17 வயதினர் கைப்பந்து போட்டியில் ராங்கியம் உயர்நிலைப் பள்ளியும், 14 வயதினர் போட்டியில் திருக்களம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியும் முதலிடம் பெற்றன.

14 வயதினர் கால்பந்து போட்டியில் நச்சாந்துபட்டி மேல்நிலைப் பள்ளி முதலிடமும், 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியும் முதலிடம் பெற்றன. பெண்களுக்கான 14 மற்றும் 17 வயதினர் கைப்பந்து போட்டியில் கொப்பனாபட்டி கலைமகள் பெண்கள் உயர்நிலைப் பள்ளி முதலிடமும், 19 வயது பிரிவில் பொன்.புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடமும் பெற்றன.