Nagaratharonline.com
 
சென்னையில் முக்கிய 4 பேருந்து நிறுத்தங்களில் இலவச வை-ஃபை வசதி  Jul 22, 15
 
சென்னையில் முக்கிய நான்கு பேருந்து நிறுத்தங்களில் வை-ஃபை வசதி அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை, எழும்பூர் நெடுஞ்சாலை, டாக்டர் நாயர்சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் உள்ள 4 பேருந்து நிறுத்தங்களில் இந்த இலவச வை-ஃபை வசதி அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து நிறுவன அதிகாரிகள் கூறுகையில், வாடிக்கையாளர்களின் நலன் கருதி இலவச வை-ஃபை வசதியை தொடங்கியுள்ளோம். இதற்கான பணிகள் கடந்த 14–ம் தேதி தொடங்கியது. 20 நாட்களில் இந்த பணி நிறைவடையும். இந்த இலவச வைபை மூலம் வாடிக்கையாளர்கள் எங்கள் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கலாம். முதல் முறையாக இந்த இலவச வை-ஃபை வசதியை அமைக்கப்படுகிறது என்றார்