Nagaratharonline.com
 
NEWS REPORT: பட்டமங்கலத்தில் குரு பெயர்ச்சி யாக வைபவம்  Jul 5, 15
 
பட்டமங்கலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு யாக வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

பட்டமங்கலத்தில் புகழ்பெற்ற குருபகவான் வழிபாட்டுத் திருத்தலமான ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்ரீஅஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள குரு பெயர்ச்சியை முன்னிட்டு சனிக்கிழமை காலை 10.30 மணியிலிருந்து கணபதி ஹோமம், குரு ஹோமத்துடன் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற்றது. இக்கோயிலில் குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருப்பது சிறப்பம்சமாகும். நவக்கிரங்களில் சுப கிரகமான குரு பகவான் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) நள்ளிரவு 1.04 மணிக்கு கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு சிவபெருமான் குருவடிவத்தில் எழுந்தருளி பாவ விமோச்சனம் கொடுத்தது இத்திருத்தலத்தில் தான் என்பது சிறப்பம்சமாகும்.