Nagaratharonline.com
 
உலகம்பட்டியில் இலவச மருத்துவ முகாம்  Jun 28, 15
 
உலகம்பட்டியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலகம்பட்டி "அ' இளைஞர் அமைப்பு மற்றும் மதுரை அரோமா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய முகாமில் மருத்துவர்கள் குணசேகரன், பிரிசில்லா, வெங்கடேஷ்வரலு, சரவணமுத்து, மோஸஷ் உள்ளிட்டோர் பங்கேற்று 237 பேருக்கு காகு, மூக்கு, தொண்டை, பல், சர்க்கரை, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினர்.

முன்னதாக "அ' அமைப்பினரால் உலகம்பட்டியின் அனைத்து தெருக்களும் தூய்மைப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.