Nagaratharonline.com
 
கீரணிப்பட்டி காட்டுசுப்பையா முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா  Jun 17, 15
 
கீரணிப்பட்டியில் காட்டுச் சுப்பையா முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை ஆச்சாரியார் அழைப்பு, எஜமானர் சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தியுடன் தொடங்கிய இவ்விழா தொடர்ந்து இரவு 10 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் விஷேச ஹோமங்களும் நடைபெற்றன.

மதியம் 12.30 மணிக்கு பூர்ணாகுதி சாற்றும் முறை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூபம் மற்றும் திருப்பள்ளி எழுச்சி நடந்தது. காலை 6 மணிக்கு மேல் புண்யாகம், நித்தியஹோமம், மகாபூர்ணாகுதி, கும்பசாமரோபனம், நடைபெற்று கடப்புறப்பாடு நடைபெற்றது.

காலை 10.20 மணிக்கு முத்துக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்வாச நாடுக் கிராமத்தினர், இளையாத்தங்குடி மற்றும் சுற்று வட்டார கிராமத்தினர், நகரத்தார் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.