Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி கோயில் தேரோட்டம்  Jun 2, 15
 
நாட்டரசன்கோட்டை ஸ்ரீகண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம் திங்கள்கிழமை நடந்தது.

இந்த கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா 10 நாள்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கடந்த மே 24ஆம் தேதி காலை கொடியேற்றம் மற்றும் இரவு காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவின் 7 ஆம் நாள் இரவு தங்க ரதத்திலும், 8ஆம் நாள் இரவு வெள்ளிரதத்திலும் சுவாமி காட்சி அளித்தார்.

9 ஆம் நாளான திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பகல் 12 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. தினந்தோறும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் காட்சியளித்தல், முயல் குத்துதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.