Nagaratharonline.com
 
பொன். புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயில் மாம்பழத் தேரோட்டம்  May 28, 15
 
பொன். புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயில் மாம்பழத் தேரோட்ட விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 19-ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மன் வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு தினமும் நடைபெற்றது.

புதன்கிழமை நடைபெற்ற தேரோட்ட விழாவில் அம்மனை தேரில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முட்டி வீதியில் தொடங்கி தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. தேர் வலம் வரும் வீதிகளின் இருபுறமும் உள்ள வீடுகளின் மாடங்களிலிருந்து மாம்பழங்கள் பக்தர்களை நோக்கி வீசப்பட்டன. அதைப் பெற்ற பக்தர்கள் அம்மனின் அருள்பெற்ற மகிழ்ச்சியில் சென்றனர். விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.