Nagaratharonline.com
 
NEWS REPORT: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 4339 ஆசிரியர்கள் பணிகள்  May 24, 15
 
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மொத்த காலியிடங்கள்: 4339

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செயல்திறன் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம்:

1. துணை முதல்வர் மற்றும் நிதி அலுவலர் பணிக்கு ரூ.1,200

2. மற்ற அனைத்து பணிகளுக்கு ரூ.750

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் கேந்திரிய வித்யாலயாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான

www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.06.2015