Nagaratharonline.com
 
அழகப்பரின் வாழ்க்கை வரலாறு புத்தக பிரதிபலிப்பு விழா  Apr 6, 15
 
காரைக்குடியில் டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி சார்பில் அழகப்பச் செட்டியாரின் வாழ்க்கை வரலாறுப் புத்தகம் குறித்த பிரதிபலிப்பு விழா அழகப்பா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் காரைக்குடியில் பல்வேறு கல்வி நிறுவனங்களை தோற்றுவித்த ஆர்.எம்.அழகப்பச் செட்டியாரின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்தின் பிரதிபலிப்புகள் குறித்து வள்ளல் அழகப்பரின் பேரனும், டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி நிர்வாகத் தலைவருமான ராமநாதன் வைரவன் சிறப்புரையாற்றினார்.