Nagaratharonline.com
 
கொல்லங்குடி காளியம்மன் கோயிலில் ஏப்.5-இல் தேரோட்டம்  Apr 2, 15
 
கொல்லங்குடி அரியகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் ஏப்.5 இல் தேரோட்டம் நடக்க உள்ளது.

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அரியகுறிச்சியில் வெட்டுடையார் காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாள்கள் சுவாதி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலோடு திருவிழா தொடங்கியது. ஏப்.4 ஆம் தேதி தங்கக்குதிரை வாகனம், ஏப்.5 ஆம் தேதி தேரோட்டம், ஏப்.6 ஆம் தேதி பூப்பல்லக்கு ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.