Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் புறநானூறு பன்முகப்பார்வை பயிலரங்க நிறைவு விழா  Mar 11, 15
 
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் புறநானூறு பன்முகப்பார்வை பயிலரங்க நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தமிழ் உயராய்வு மையம் சார்பில் பிப். 27-ம் தேதி தொடங்கிய பயிலரங்கம் 10 நாள்கள் நடைபெற்றது. பயிலரங்க தொடக்க விழாவில் அல்லூர் திருவள்ளுவர் தவச்சாலை தலைவர் இரா. இளங்குமரனார் பங்கேற்று, பயிலரங்க மைய பொருளுரையாற்றினார்.

தொடர்ந்து பயிலரங்கில் பேராசிரியர்கள் மற்றும் தமிழறிஞர்கள் 42 பேர் பங்கேற்று புறநானூற்றின் பல்வேறு கூறுகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து பேசினர்.இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிலங்க நிறைவு விழாவுக்கு சன்மார்க்க சபை தலைவர் ப.சா. சிங்காரம் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் க. கனகராசு முன்னிலை வகித்தார். இணைப் பேராசிரியர் ம. செல்வராசு வரவேற்றார். கல்லூரியின் தமிழ் உயராய்வு மைய இணைப் பேராசிரியர் தெ. திருஞானமூர்த்தி பயிலரங்க மதிப்புரை வழங்கினார்.

கல்லூரிக் குழுத் தலைவர் அ. சாமிநாதன், செயலர் சி. சாமிநாதன், சன்மார்க்க சபை செயலர் இராம. இலக்குமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பயிலரங்க அமர்வு குழுவினர் சிவ. சொர்ணம், இராம. மோகன், வே.அ. பழனியப்பன், பொன். கதிரேசன், பெரி. அழகம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.