Nagaratharonline.com
 
NEWS REPORT: குவைத்தில் தொலைத்தொடர்புதுறையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்  Feb 26, 15
 
குவைத் நாட்டில் தொலைத்தொடர்புத்துறையில் பணியாற்ற விரும்பு வோர் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தொலைத் தொடாóபுத் துறையின் குவைத் நாட்டு திட்டப்பணிகளில் பணியாற்ற ஆள்கள் தேவைப்படுகிறார்கள். 3 ஆண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் 50 வயதுக்குள் பட்ட டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டு அனுபவம் பெற்ற சிவில் மேற்பார்வையாளாóகள்.குவைத் நாட்டில் இரு ஆண்டு பணியாற்றி 30 மாதங்களுக்கு செல்லத்தக்க பாஸ் போர்ட் மற்றும் குவைத் ஒட்டுநாó உரிமம் வைத்துள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன ஒட்டுநாóகள் தேவைப்படுகிறார்கள். குவைத் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்த பிறகு இரண்டு வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்துக்கேற்ற ஊதியத்துடன் இலவச விசா, விமான பயணச்சீட்டு, இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள் வேலை கொடுப்பவரால் வழங்கப்படுகிறது. எனவே தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம், கல்வி, அனுபவ ம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் இரு நகல்கள், வெüóளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட 6 புகைப்படம் மற்றும் உண்மை பாஸ்போர்ட் பி.26 முதல் 28-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நா ளில் காலை 8 மணிக்கு சென்னை, திருவி.க தொழற்பேட்டை, ஆலந்தூர் சாலை ஒருங்கி ணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்திலுள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன த்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-22502267, 22505886, 0822063438 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.