Nagaratharonline.com
 
காரைக்குடி, திருப்புத்தூர் பகுதிகளில் உள்ள நகைகடைகளில் ஆய்வு :ரூ.34,500 அபராதம் வசூல்  Nov 8, 14
 
சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள நகைகடைகளில் எடையளவு கருவிகளின் துல்லியம் குறித்து மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 128 கடைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.நகைகளின் எடைகள் சரிபார்க்க வைக்கப்படும் எடைக்கற்கள் இல்லாமல் 54 கடைகளும், மறு முத்திரையிடப்படாத மின்னனு தராசு பயன்படுத்திய ஒருகடையும், மின்னனு மறு முத்திரையிடப்பட்டதற்கு வழங்கப்பட்ட சான்றை கடைகளில் வைக்காத 4 கடைகளும் கண்டறியப்பட்டது. சட்ட விதிமீறலுக்காக ரூ.34ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டதாக தொழிலாளர் ஆய்வாளர் தெரிவித்து உள்ளார்.