Nagaratharonline.com
 
NEWS REPORT: கண்டவராயன்பட்டி தண்டாயுதபாணி கோயிலில் கந்தசஷ்டி விழா  Oct 30, 14
 
கண்டவராயன்பட்டி தண்டாயுதபாணி திருக்கோயிலில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 9 ஆம் ஆண்டு கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு அருள்மிகு வலம்புரி விநாயகருக்கும் தண்டாயுதபாணி சுவாமிக்கும் காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேகங்களும் லட்சார்ச்சனையும் நடைபெற்றன. காலை 7.30 மணிக்கு தேவகோட்டை கமலாபழனியப்பனின் பக்திப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு நடைபெற்ற ஆன்மீக அரங்கத்தில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.

ஈரோடு நகரத்தார் சங்கத் தலைவர் என்.எஸ்.எஸ். சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆசிரியர் சே. சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார். பேராசிரியர் சே. குமரப்பன் துவக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து பொற்கிழி கவிஞர் அரு. சோமசுந்தரம் கந்தபுராணம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கண்டனூர் முருகன் அருள் அடியார் ஆசியுரை வழங்கினார். பின்னர் இன்பமே எந்நாளும் என்ற தலைப்பில் மேலச்சிவல்புரி ராம.மு. ராமநாதன் ஆன்மீக உரையாற்றினார். முடிவில் சிவ. சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆன்மிக உரை நிகழ்சியிலும், தண்டாயுதபாணிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனையிலும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சே. சொக்கலிங்கம், ராம. தேனப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.