Nagaratharonline.com
 
NEWS REPORT: CMDA உத்தரவால் வீடுகள் விலை உயரும் அபாயம் : கூடுதல் பரப்புக்கு PREMIUM FSI கட்டணம் ஏன்?  Oct 26, 14
 
சி.எம்.டி.ஏ.,வின் புதிய உத்தரவால், சென்னையில் வீடுகளின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை பெருநகருக்கு உட்பட்ட பகுதிகளில், சிறப்பு மற்றும் அடுக்குமாடி கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது, நிலத்தின் பரப்பளவில், 1.5 மடங்கு என்ற அளவில் எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீடு அனுமதிக்கப்படுகிறது. இதில் அடுக்குமாடி திட்டங்களுக்கு, 2.25 என, தளபரப்பு குறியீடு அனுமதிக்கப்படுகிறது.
உத்தரவு
இவ்வாறு, அனுமதி பெற்றோர் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், பணி நிறைவு சான்று பெற விண்ணப்பிப்பர். இதற்காக, சி.எம்.டி.ஏ., அமலாக்க பிரிவு அதிகாரிகள், அந்த கட்டுமான திட்டத்தை ஆய்வு செய்யும் போது, அனுமதிக்கப்பட்டதைவிட தளபரப்பு குறியீடு, 0.03 வரை கூடுதலாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அது அனுமதிக்கப்படும். இதற்கு மேல் பயன்படுத்தப்பட்டிருந்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அனுமதிக்கப்படும் கூடுதல் பரப்பளவுக்கு, உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி கட்டணங்கள் மட்டும் தனியாக வசூலிக்கப்படுகின்றன.
இதில், இக்கட்டணத்துடன், கூடுதல் பரப்பளவுக்கு பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணம் வசூலிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்கான நிர்வாக உத்தரவை சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் கார்த்திக், கடந்த ஜூலை 21ம் தேதி பிறப்பித்தார்.
இந்த உத்தரவால், ஒவ்வொரு கட்டுமான திட்டத்திலும், 50 சதுர மீ., பரப்பளவு பகுதிக்கு, பதிவுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் கட்டணம்
வசூலிக்கப்படும்.இதற்கு கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.