Nagaratharonline.com
 
சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நினைவு நாள்  Oct 17, 14
 
சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின் நினைவுநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24 ல் பிறந்தவர் கவியரசர் எனப் பெயர் பெற்ற கண்ணதாசன். சிறுகூடல்பட்டி மலையரசி கோயிலில் கவிதைகளை வடித்து கண்ணதாசன் ஆனவர். இவரது 33 வது நினைவுநாள் விழா வெள்ளிக்கிழமை சிறுகூடல்பட்டியில் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு கண்ணதாசன் இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் எஸ்.எம்.பழனியப்பன், தலைமை வகித்து கண்ணதாசன் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.பொதுமக்கள் ஏராளமானோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.