Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்  Aug 31, 14
 
பொன்னமராவதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் சார்பில் வழிபடப்பட்ட விநாயகர் சிலைள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அமரகண்டான் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

பொன்னமராவதி சிவன் கோயிலில் தொடங்கிய ஊர்வலம் நாட்டுக்கல், வலையர் வளவு, மேலரதவீதி, காந்தி சிலை, அண்ணாசாலை, வழியாக வந்து அமரகண்டான் குளத்தில் 9 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.